சீமான் காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சைபடுத்தி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சாட்டை முருகன் என்று ஒருவரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஸ்ரீபெரும்புதூரை தெரியுமா என்றால், என்ன ஸ்ரீபெரும்புதூர் ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் பிறந்த ஊர் அது. அந்த மண்ணை ரத்தக்கரை ஆக்கி, தமிழர்களை தலை குனிய வைத்தவர்கள், பாதகர்களை பற்றிப் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன ஸ்ரீபெரும்புதூர் ? நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் வா பாப்போம்.
என்ன பேச்சு இது ? அடிக்கடி கிண்டல் அடிப்பது, நக்கல் அடிப்பது, காமெடியில் வடிவேலுவை மிஞ்சி விடுவார்கள் போல இருக்கு. ஆகையால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நீ மோதுவதாக இருந்தால் நேராக வந்து மோது. இறந்து போன தலைவர்களை கொச்சைப்படுத்துவது, அவர்களெல்லாம் மகான்கள். இன்றைக்கு விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டவர் ராஜீவ்காந்தி அவர்கள்.
இன்றைக்கு நாம் மைக் முன்னால் நிற்கிறேம், இந்த கேமராக்கள் இருக்கிறது என்றால் அதெல்லாம் உருவானதற்கு காரணம், இந்தியாவில் வளர்ந்ததற்கு காரணம், இப்படிப்பட்ட தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக எங்கள் குடும்பமாக, எங்கள் உள்ளத்திலும் இணைந்திருக்கின்ற இந்திரா காந்தி குடும்பம், அதை பற்றி இனிமேல் வாயை திறந்தால் நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தவர்கள், ஜனநாயகத்தின் மீது அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர்கள், எச்சரிக்கிறோம்.
ஒரு அளவு இருக்கிறது இந்திராகாந்தி குடும்பத்தை பற்றி பேசுவதற்கு. உனக்கு தகுதி என்ன இருக்கு ? நீ யார் யாரையோ அப்பா என்று சொல்ற, யார் யாரையோ உறவு கொண்டாடிட்டு இருக்க, மணல் மாபியா கிட்ட இருந்து பணம் வாங்கி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள், வெளியூருக்கு சென்றால் fax கொடு, மெஷின் கொடு என்று வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறார்கள். இது மாதிரி காங்கிரஸ் காரர்கள் எதாவது ஈனப்பிழைப்பு பிழைத்து கொண்டிருக்கிறார்களா?ஆகையால் நாவடக்கம் இது தான் முதலும் கடைசியுமான எச்சரிக்கை, எங்கள் தலைவர்களை பற்றி கொச்சைபடுத்தி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதற்குபிறகு விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என தெரிவித்தார்.