Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோதலில் இரு கல்லூரி மாணவர்கள்…. அதிரடியில் காவல்துறையினர்…. வணிக வளாகத்தில் பரபரப்பு….!!!!

இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகர் ராயப்பேட்டையில் ஒரு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று திடீரென்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர்.

இந்த மோதலினால் வணிக வளாக நிர்வாகம் சார்பில் அண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |