Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிரத்தை விழுங்கிய நபர்…. விசாரணையின் போது நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!!

விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் அந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இனிமா கொடுத்து மோதிரத்தை வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |