Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோதுவது போல் வந்த தனியார் பேருந்து…. கோபத்தில் எட்டி உதைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜமுனா தனது மகனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற உதவி தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து ஜமுனா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே இருக்கும் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதுவது போல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜனின் குடும்பத்தினர் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோபத்தில் ஜமுனா பேருந்தை எட்டி உதைத்தார். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |