தேனி மாவட்டம் கம்பம் அருகே தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் வனபகுதியை ஒட்டியுள்ள மணிக்கட்டு ஆலமரம் பகுதியில் இன்று அதிகாலை மோப்பநாய் வெற்றியுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருப்பதை மோப்ப நாய் வெற்றி கண்டு பிடித்தது. இதையடுத்து 5 செட் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. நன்கு விளைந்து ஒரு வார காலத்தில் வெட்டக் கூடிய தருவாயில் இருந்த கஞ்சா செடிகளை வனதுறையினரின் உதவியுடன் போலீசார் தீவைத்து அழித்தனர்.
கஞ்சா பயிரிடப்பட்ட நபர் மீது கம்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ வைத்து எரிக்கப்பட்ட கஞ்சா செடிகள் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு 500 கிலோ வரை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை ஏற்கனவே 4 படகுகள் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது