மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோர்பி நகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணைக்கு பின் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி பாலிகா சந்தீப் சிங் ஜாலா கடமை தவறியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை மோர்பி நகராட்சி நிர்வாகம் சஸ்பென்ட் செய்திருக்கிறது. மேலும் பாலம் இருந்து விழுந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்திருக்கிறது.