Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து…. நாளை குஜராத் விரையும் மோடி….. வெளியான தகவல்…..!!!!

சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டுமாக திறக்கப்பட்டது.

அந்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டமானது அலைமோதியது. தீபாவளிபண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானோர் பாலத்துக்கு வந்திருந்தனா். இந்நிலையில் பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல் அப்பாலம் மாலை 6:30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். இவ்விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மோர்பி பாலம் விபத்து நேர்ந்த இடத்திற்கு பிரதமர் மோடி நாளை விரைகிறார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடை மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட பிரதமர் மோடி செல்கிறார்.

Categories

Tech |