மோர்பி பால விபத்து பற்றி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2016 ஆம் வருடம் கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பல பேர் உயிரிழந்ததற்கு மேற்குவங்க மம்தா பானர்ஜி அரசு பற்றி பிரதமர் மோடி குறை கூறியுள்ளார்.
ஆனால் தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் 27 வருடங்களாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில் கடந்த ஆறு மாதங்களாக மோர் விபாலம் பழுது பார்க்கப்பட்டு திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின் இடிந்து விழுந்து இருக்கின்றது. இந்த வருடம் ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போது நர்மதா கால்வாய் உடைந்து இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.