Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மோர் குழம்பு…அதுவும் வெண்டைக்காயை வைத்தா? செஞ்சிடா போச்சு…!!

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்            – சிறிது
வெங்காயம்                      – ஒன்று
மஞ்சள்தூள்                       – அரை டீஸ்பூன்
உப்பு                                     – தேவைக்கேற்ப
தயிர்                                     – ஒன்றரை கப்

அரைக்க தேவையானவை:

பச்சரிசி                              – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு                 – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல்         – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்            – 3
சீரகம்                                   – அரை டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை:

எண்ணெய்                        – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு               – கால் டீஸ்பூன்
கடுகு                                     – கால் டீஸ்பூன்
சீரகம்                                    – கால் டீஸ்பூன்
உளுந்து                                – கால் டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அரை கப் தயிரை அரை கப் நீர் விட்டு மோர் ஆக்கி கொள்ளவும். பாத்திரத்தில் அரிசி, பருப்பை ஊற வைக்கவும்.

மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த வத்தல், சீரகம் என அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், உளுந்து, வெங்காயம், நறுக்கிய  வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதன்பின் மோர், அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆறவிடவும். ஆரியப்பின் தயிர் சேர்த்து கலக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.

Categories

Tech |