Categories
சினிமா தமிழ் சினிமா

‘மௌன ராகம்’ ரேவதியாக மாறிய பிரபல சீரியல் நடிகை… ரசிகர்களை கவரும் வீடியோ…!!!

சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வித்தார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் 49 ஓ, ஆக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அன்பே வா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CTPE2Mfjw1r/

இந்நிலையில் நடிகை டெல்னா டேவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரேவதி நடிப்பில் வெளியான ‘மௌன ராகம்’ படத்தில் வரும் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலுக்கு டெல்னா டேவிஸ் ரீல் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |