தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு அரசாணையாம். கண்டதேவியில் தேர் வடம் பிடித்திழுக்க, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி கொண்டாட, சேலம் திரௌபதி அம்மனை வழிபட திமுக எப்போது அரசாணை வெளியிடும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.