Categories
அரசியல் மாநில செய்திகள்

”ம.சே.க”…. கசிந்தது கட்சி பெயர்…. ரஜினிக்காக இளம் வாக்காளர்கள்… மகிழ்ச்சியில் தொண்டர்கள் …!!

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவது உறுதி, நான் அரசியலுக்கு வருவேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசியல் வருகையை உறுதி செய்தார். வருகின்ற 31ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பு – ஜனவரியில் கட்சி தொடக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக – திமுக என இரு துருவ அரசியலாக இருந்த நிலையில் ரஜினியின் வருகை தமிழக அரசியலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா ? என்ற ஏக்கத்தோடு புதிய வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கட்சி பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளுக்கு சின்னம் வழங்கி நிலையில் தற்போது ரஜினியின் அரசியல் கட்சியின் பெயர் கசிய தொடங்கியுள்ளது. ரஜினி தொடங்கவுள்ள கட்சிக்கு ”மக்கள் சேவை கட்சி” என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |