நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற உள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது. இதற்காக அக்கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளது, தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.