திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி களம் காண்கிறது. அதன்படி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிட ஏஐஎம்ஐஎம் (AIMIM) கவனம் செலுத்துகிறது.இதுவரை மாநிலத்தில் இஸ்லாமிய வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு சென்றன.
இந்நிலையில், ஓவைசி கட்சி தனித்து களம் கண்டால், அது இரு கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத்துக்கு வெளியேயும் ஓவைசியின் கட்சி வெற்றிகளை பெற்றுவருகிறது. அண்மையில் பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓவைசியின் கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதேபோல் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 44 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் அசாதுதீன் ஓவைசி கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் வடஇந்தியாவில் அக்கட்சி தனது அரசியல் தளத்தை விரிவுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.