மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார. அதேபோல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தற்போது தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு போதிய சிகிச்சை எடுத்து வருவதாகவும், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவி வரும்,
இந்த சூழ்நிலையில் வைரஸ் பாதிப்பு சம்பந்தமான ஆய்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் என்றும், மாநிலத்தில் அரசுப் பணிகள் இதன் காரணமாக தொய்வு அடையாது என்றும், குறிப்பாக காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
#COVID19 का समय पर इलाज होता है तो व्यक्ति बिल्कुल ठीक हो जाता है। मैं 25 मार्च से प्रत्येक शाम को कोरोना संक्रमण की स्थिति की समीक्षा बैठक करता रहा हूँ। मैं यथासंभव अब वीडियो कांफ्रेंसिंग से कोरोना की समीक्षा करने का प्रयास करूंगा।
— Shivraj Singh Chouhan (मोदी का परिवार ) (@ChouhanShivraj) July 25, 2020