Categories
தேசிய செய்திகள்

யங் இந்தியா நிறுவனத்திற்கு அதிரடி சீல்….. ராகுல், சோனியா காந்தி வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சட்டவிரோதமாக நடைபெற்ற பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். இவர் சுதந்திரத்திற்கு முன்பாக நேஷனல் ஹொரால்டு என்ற பத்திரிகை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூபாய் 90 கோடி வழங்கப் பட்டது. இந்த வட்டியில்லா கடனை நேஷனல் ஹெரால்டு நிறுவனம் திரும்ப கொடுக்கவில்லை. இதன் காரணமாக நேஷனல் ஹொரால்டு நிறுவனத்தில் செயல்பட்டு வந்த அசோசியட் ஜெனரல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருக்கின்றனர். இந்நிலையில் அசோசியேட் ஜெனரல்ஸ் நிறுவனத்தின் 2000 கோடி ரூபாய் சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்து விட்டதாக பாஜக கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வரும் நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சூழலில் திடீரென அமலாக்கத்துறை நேஷனல் ஹொரால்டு பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது யங் இந்தியா நிறுவனத்திற்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வீட்டிற்கு முன்பாக பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |