அதிமுக வெற்றிபெற்று இருந்தால் அமைச்சர்களில் சட்டைப் பையில் மோடி போட்டோவை வைத்து இருப்பார்கள் என புகழேந்தி தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, எந்த காலகட்டத்திலும் அதிமுக தொண்டர்கள் வேறு கட்சி கொடியை பிடிக்க வேண்டாம். தேர்தலில் வியூகம் சரியாக அமைக்கப்படாததால் தேர்தலில் தோல்வியை தழுவினோம் என ஓ.பி.எஸ் சொன்னார். வியூகம் அமைத்த போது இவர் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் தானே… முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சொன்னதை வரவேற்பதாகவும் சொன்னார், அந்த மேடையில்.
சின்னமா என்ற வி.கே சசிகலாவிடம் பேசி சமாதானம் செய்து, ஒரு 23 இடங்கள் வாக்குகளைப் பிரித்தது டிடிவி தினகரன் கட்சி. அதுவுமில்லாமல் தேமுதிகவும் இணைந்திருந்தால் ஒரு வெற்றியைப் பெற்று இருக்கலாம். எந்த வியூகம் என்பது அவர் சொன்னது அதற்கு தான் பொருந்தும், அதை தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்டு காண்பித்தார்.
ஆனால் என்னை பொறுத்தவரை… அந்த வியூகம் அமைக்காதது தான் நல்லது. நான் ஓபிஎஸ் கருத்துக்கு எதிரான கருத்தை பதிவு செய்கிறேன். அப்படி வியூகம் அமைந்திருந்தால்… எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து இந்த ஆட்சி ஆட்சி கட்டிலுக்கு வந்து இருக்கும். ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் தயாராக இல்லை.
ஆனால் அண்ணா திமுக நிர்வாகிகளும், அண்ணா திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் மோடியை பாக்கெட்டில் வைத்து கொண்டு, அந்த பக்கம் டாக்டர் ராமதாசை வைத்துகொண்டு போற நிலைமை ஏற்பட்டிருக்கும். திராவிட இயக்கத்தினுடைய வரலாறுகள் மறந்து, அந்த தலைவர்களை மறைத்து இவர்கள் வட நாட்டு தலைவர்களை கொண்டாடுகின்ற சூழ்நிலை கூட்டணிக் கட்சிகளுக்கு அடிமையாக இருக்கின்ற போக்கினுடைய வெளிப்பாடாக மாறிப்போயிருக்கும். அது இல்லாமல் வியூகம் சரியாக அமைக்கப்படாததால் தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.