தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களை திறக்க வேண்டுமென பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினர் வெவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, திமுகவினருக்கு கடவுள் இல்லை என்று உறுதிப்படுத்துவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். எனவே சேகர்பாபு தவறான தகவல்களை சொல்கிறார் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திமுக அரசு தங்களுடைய நாடகத்தை ஓரங்கட்டிவிட்டு கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும். இதற்காக நாங்கள் 10 நாட்கள் கெடு கொடுத்து உள்ளோம். ஆயிரம் பாஜக வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று சேகர்பாபு சொல்லியிருக்கிறார். ஆனால் பாஜகவின் 100 பூத் தலைவர்களை அனுப்பி வைக்கிறோம் திமுக அசைத்து விடலாம் என்று பேசியுள்ளார்.