கனடா கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளிலிருந்து வரும் விமான சேவையை தடை செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் ஆக்சிஜனிற்க்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் கனடாவிலும் பரவி வரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவைகளில் 1.8% நபர்கள் விமானம் மூலம் பயணம் செய்தவர்கள் என்று கனட நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது. அதாவது கனடாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான விமானங்கள் தரையிறங்குகிறது. அதில் ஒருவருக்காவது கொரோனா உறுதி செய்யப்படுகிறது. அதில் 32 விமானங்கள் இந்தியாவை சேர்ந்ததால் கனடா வருகின்ற 30 நாட்களுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் விமான சேவைகளுக்கு தடைவிதித்துள்ளது.