Categories
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…..11 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் யமுனை ஆற்றில் படகு போக்குவரத்து சேவை நடைபெற்று வருகின்றது. இதில், மார்க் என்னும் பகுதியில் இருந்து ஜரௌலி காட் என்ற பகுதியை நோக்கி நேற்று முன்தினம் 30 பேர் அமரும் வகையிலான படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திடீரென பெரிய அலை காரணமாக வந்த படகு கவிழ்ந்தது. படகில் 30 முதல் 35 முதல் பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3 பேரின் உடல் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று தொடர்ந்த மீட்பு பணியில் மேலும் எட்டு பேரின் உடலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |