Categories
தேசிய செய்திகள்

யமுனை நதியில் நிறையும் நச்சு நுரைகள்… வெளியான ஆய்வறிக்கை… சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை…!!!!!

யமுனை ஆற்றில் நச்சு கழிவுகள் நிறைந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் யமுனை நதி இமயமலையில் உற்பத்தியாகி புதுடெல்லி, ஆக்ரா வழியாக பாய்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் பக்தர்கள் யமுனை நதியில் நீராடுவது வழக்கமான ஒன்றாகும். இத்தகைய யமுனை நதியில் தற்போது தொழிற்சாலை மற்றும் நகர்புற கழிவுகள் அதிக அளவில் திறந்து விடப்படுகின்ற காரணத்தினால் அதில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது.

முழுமையாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலப்பதன் காரணமாக அதிக அளவில் நுரை ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறியுள்ளது. மேலும் சலவை சோப்புகளில் காணப்படும் பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் போன்றவற்றின் காரணமாக யமுனை நதியின் நச்சுத்தன்மை அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் டெல்லியின் நீர் தேவையில் 60 சதவீதத்தை யமுனை நதி பூர்த்தி செய்யும் அதே சமயம் நகரின் மொத்த கழிவுகளில் அதே 60% சதவிகிதம் ஆற்றில் கலக்கிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |