Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மாடி…. இவங்க தங்கத்தை கடத்துனாங்களா?…. பிக்பாஸ் பிரபலதிடம் தொடரும் விசாரணை….!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அக்ஷரா ரெட்டியிடம் தங்க கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 

விஜய் டிவியில் அனைவரும் பார்க்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது  சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா தற்பொழுது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நேற்று அக்ஷரா பீடம் கோழிக்கோட்டில் வைத்து அமலாக்கத் துறையினர் தங்கம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு 20 கிலோகிராம் தங்கம் கடத்தியதாக கொச்சி விமான நிலையத்தில் இரண்டு புர்கா உடை போட்டிருந்த பெண்கள் மீது வழக்குப் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஃபைஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமா துறையில் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் அக்ஷரா ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்கள். அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அக்ஷரா ரெட்டியின் நிஜப்பெயர் ஐஸ்வர்யா சுதாகர் என்றும் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியதால் இவருடைய பெயரை மாற்றிக் கொண்டதாகவும்  அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |