Categories
மாநில செய்திகள்

யம்மாடி….. “இவன் போற ரூட்ல மட்டும் போய்டாதீங்க மக்கா”…. இணையத்தை தெறிக்கவிடும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஏற்படுத்திய விபத்தில் குழந்தைகளின் பெற்றோர் சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.இதில் ஒரு சில சமயங்களில் சுவாரஸ்யமாக விபத்தில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தவர்களும் உள்ளனர். அப்படி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை பலரும் பார்த்திருப்போம்.

அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வாகனம் ஓட்டி வரும் நபர் ஒருவர் சந்திப்பு சாலையில் எந்த புறமும் பார்க்காமல் வருகின்றார்.அப்போது மெயின் சாலையில் வேகமாக ஒரு இருசக்கர வாகனம் வருவதை பார்த்தவுடன் இவருக்கு பயம் ஏற்பட்டு வாகனத்தை கீழே போட்டு விட்டார். அப்போது சாலையில் வேகமாக வந்த வாகனம் இவருடைய வாகனத்தின் மீது மோதி நிற்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பிறகு உடனே வாகனத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் சாலையில் திரும்ப முயற்சிக்கும்போது மீண்டும் கவனக்குறைவாக பேருந்து வருவதை பார்க்காமல் சென்று அதன் மீது மோதி விட்டார்.அடுத்தடுத்து இரண்டு விபத்துகளில் சிக்கி அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இவன் போற ரூட்ல மட்டும் போய்டாதீங்க மக்கா என்று காமெடியாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |