Categories
உலக செய்திகள்

யம்மாடி!!…. 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை சுறாவா…. 59 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்ந்த சம்பவம்…. பீதியில் மக்கள்….!!

சிட்னியில் உள்ள கடலில் நேற்று முன்தினம் வெள்ளை சுறா தாக்கியதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் உற்சாகமாக நீந்தி கொண்டிருந்த ஆண் ஒருவரை வெள்ளை சுறா தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதனை பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இதனை தொடர்ந்து சிட்னி நகரில் பல காலமாக கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு சுறா தாக்குதல் நடைபெறுவது அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 59 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் இந்த மாதிரியான சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்நிலையில் சிட்னியில் இந்த சம்பவத்தினால் பெரும்பாலான கடற்கரைகள் மூடப்பட்டு நீச்சலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய வெள்ளை சூராவை ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூசவுத்வேல்ஸ் மாநில அரசு இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “மனிதரைத் தாக்கி கொன்ற சுறா ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் சுறாவின் கொடூரமான மற்றும் வெறித்தனமான தாக்குதலை பற்றி கூடியுள்ளனர். அதில் கிரிஸ் லிண்டோ என்பவர் கூறியதில் “அந்த நபர் நீந்தி கொண்டிருக்கும் போது அவரை சுறா வந்து செங்குத்தாக தூங்கியது” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு படையினர் அந்த மனிதரின் உடல் பாகங்களை கைப்பற்றினர். இச்சம்பவம் சிட்னி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |