மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதிராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடந்தது. அப்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் பெற்ற “யாக்கை திரி காதல் சுடர்” பாடலை மேடையிலிருந்த கலைஞர்கள் பாடினார்கள். இந்நிலையில் திரிஷா,சித்தார்த் ஆகிய இருவரும் அப்பாடலுக்கு இருந்த இடத்திலிருந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த வீடியோ இப்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.