Categories
தேசிய செய்திகள்

யாசகம் கேட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் ….. போலீசாரின் வெறிச்செயல்….பெரும் சோகம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தலைமை காவலராக இருப்பவர் ரவி சர்மா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டியா என்ற மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள சாலையில் பேருந்துக்காக  காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பசிக்கிறது, காசு இருந்தால் தருமாறு அவரிடம் யாசகம் கேட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் யாரும் காசு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் அச்சிறுவன் தொடர்ந்து காசு கேட்டு அவர்களை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி சர்மா, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி, அதன் பின் அவனது கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதனால் அச்சிறுவன் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் ரவி சர்மா, அச்சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்தபின், அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அவனின் உடலை அருகில் இருந்த புதர் செடிகளுக்குள் வீசி சென்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அதற்கு அடுத்த நாள்,  அப்பகுதியில் உள்ள மக்கள்  சிறுவனின் உடலை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிள்ளனர்.

இதையடுத்து இந்த விசாரணையில் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவனை ஒருவர் கழுத்தை நெரித்து  கொலை செய்யும் காட்சி, அதில் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த நபர் யாரென விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, காவலர் பயிற்சிப் பள்ளியின் தலைமை காவலர் ரவி சர்மா தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |