Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யானைக்கால் நோய் தடுப்பு முகாம்” நகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெத்தநாயக்கனூர், சோமந்துறை சித்தூர் போன்ற பகுதிகளில் யானைக்கால் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |