தாய்லாந்தில் யானைக்குட்டி ஒன்று பூங்கா ஊழியரின் கவனத்தை பெறுவதற்காக குறும்புத்தனம் செய்யும் வீடியோ காண்போரை உற்சாக மூட்டுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் அத்வனியால் ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது.
ஒரு வயது ஆன கும்சுத் என்ற அந்த யானை குட்டி முகாமில் பூச்சு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை தும்பிக்கையால் வருடுகிறது.
ஊழியரின் கவனம் தன் பக்கம் திரும்பியதை அறிந்தவுடன் உற்சாகத்தில் வேலி மீது ஏறி தும்பிக்கையால் அவரை தன்வசம் இழுத்து விளையாடுகிறது.