Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா?… ஏற்பட்ட குழப்பம்…3 வது நாளாக தேடும் பணி தீவிரம்..!!!!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே  கொடுங்கையர் ராசிபலத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயமடைந்து உடல் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யார் யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா தமிழக வனத்துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானையை தேடும் பணி தொடங்கியுள்ளது.

ஆனால் அதற்குள் யானை அங்கிருந்து நகர்ந்து அடர்ந்த  வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனை அடுத்து யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கிடையே காயம் அடைந்த யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக பொள்ளாச்சி டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம் முத்து வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காயமடைந்த யானை ஆனைகட்டியை அடுத்த செங்கோட்டை பகுதியில் தென்பட்டுள்ளது.

இதனை அடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று மூன்றாவது தினமாக வனத்துறையினர் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்  கேமராக்களை பறக்க விட்டும் காட்டு யானையை தேடி வந்தனர். ஆனால் காயமடைந்த  காட்டு  யாணையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து தேடுதல் பணி தொடரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |