யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்குகிறோம் அதற்கு பின் உள்ள ஆன்மிக காரணங்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
காட்டை உருவாக்கியதில் யானைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு நாளும் உணர்வுகளை தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானை வழியில் கிடைக்கும் மரம், செடி, கொடிகள் என அனைத்தையும் தின்றது. பின்னர் நடந்து கொண்டே இருக்கும் போது அவை போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாகும் வளமையுடன் கூடியதாக இருக்கின்றது. அதனால் யானைகள் பயணம் செய்யக் கூடிய தூரம் வரை சில நாட்களில் புதிய மரம், செடி, கொடி போன்ற தாவரங்கள் வளரும்.
இது போன்ற காட்டை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு உள்ளது. தினமும் மூலிகை தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் மிகவும் பலனை தரக்கூடியது இந்த யானைகளே. மேலும் அதிசயத் தக்க விஷயங்கள் அடங்கியுள்ள யானை ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்க கூடிய தன்மை கொண்டது. ஆன்மீக சுவாச பயிற்சியை முன்னேற்றக் கூடிய விஷயங்களில் ஒன்றுதான் பிராணயாமம், வாசியோகம் போன்ற யோகாசன பயிற்சிகள்.
அப்படி ஒரே நேரத்தில் அல்லது எப்பொழுதுமே இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றது யானை. இதற்கு சுழுமுனை வாசியோகம் என்றும் பெயர். அப்படிப்பட்ட சுழுமுனை வாசியோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை தூக்கி தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது. இப்படிப்பட்ட தெய்வீகத்தை பொருந்திய யானையிடம் ஆசிர்வாதம் பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும்.