பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் யானையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் காலா, ராஜா ராணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3, சின்ட்ரெல்லா, புரவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது
மேலும் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் யானையுடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.