Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யானையை விரட்டும் பணி…. அலறி துடித்த ஊழியர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வன ஊழியரை விஷப்பாம்பு கடித்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனக்காவலரான அழகு மணிவேல் என்பவரை கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அதன்பின் சக ஊழியர்கள் அழகுமணிவேலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |