Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானை கஜம் அருவியில்…. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை…. வனத்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் யானை கஜம் அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக செல்வார்கள். இந்த அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சதுரகிரி மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் வனத்துறையினரின் உத்தரவை மீறி சில சுற்றுலா பயணிகள் அருவியில் அடிக்கடி குளித்து வருகின்றனர். கடந்த வாரம் 4 சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துள்ளனர். இவர்களுக்கு வனத்துறையினர் ரூபாய் 7000 அபராதம் விதித்துள்ளனர். மேலும் அருவியில் அனுமதி இன்றி குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |