Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை கிராமத்திற்குள் வருவதை தடுக்க…. நூதன ஏற்பாடு செய்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் சின்னாறுபதி மலைவாழ் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் இதுவரை யானை கிராமத்திற்குள் வரவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில நாட்களாக ஆழியாறு பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானை இதுவரை வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் கவனமாக செல்ல வேண்டும் எனவும், செல்போனில் புகைப்படம் எடுப்பது, சத்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |