Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள்…. அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள்….!!

தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பண்டைய கால யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 7-வது அகழாய்வு குழியில் தோண்டியபோது பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் யானை தந்தங்களை வைத்து ஆபரணங்கள் போன்ற பொருட்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுடுமண்ணால் செய்யப்பட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளது. மேலும் தற்போது வரை 5 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் இன்னும் தோண்டினால் விலை உயர்ந்த பொருட்கள் கிடக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |