Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யானை தந்தம் ரூ. 23 லட்சமா…? தானாக வந்து சிக்கிய 2 வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் ஜெயக்குமார் சதீஷ்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ்குமார் மீது வனத்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் யானை தந்தத்தை சதீஷ்குமாரும், ஜெயக்குமாரும் இணைந்து விற்பனை செய்ய முற்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அறிந்த சென்னை தலைமையிட வனத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு செல்கிறார் என கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு யானை தந்தத்தை விலைக்கு வாங்குவது போல பேசியுள்ளனர்.

அப்போது தான் வேலூரில் இருப்பதாகவும் இங்கு வந்து யானைத்தந்தத்தை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் சதீஷ்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து சதீஷ்குமார் கூறியபடி சாத்துமதுரை பகுதியில் வைத்து யானைத்தந்தத்தை பெற்றுக் கொள்வதற்காக சாதாரண உடையில் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது யானை தந்தத்தை விற்பது தொடர்பாக பேசிய போது அங்கு மறைந்திருந்த வனத்துறையினர் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து 20 கிலோ எடை கொண்ட யானை தந்ததையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |