Categories
உலக செய்திகள்

யானை மீது நிர்வாண போஸ்… பிரபலத்தால் கடும் சர்ச்சை…!!!

இந்தோனேசியாவில் பிரபல மாடல் ஒருவர் யானையின் மீது நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் மகள் அலிஸ்யா கபெல்னிகோ பிரபல மாடல். இந்நிலையில் அவர் இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானை மீது அமர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பார்த்த இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் யானை மீதான அழகியல் உணர்வின் வடிவமாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். இருந்தாலும் இது கண்டனத்திற்குரியது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |