உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சீனாவில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி கையில் ஏந்தியபடி தமிழ்மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் சீனாவில் உள்ள யூனான் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகம் எங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சீன நாட்டில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை நிறைமதி கிகி ஜாங் என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சீனாவில் தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக கற்க கசடற, செம்மொழி, குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பது அறிவு என தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி கையில் ஏந்தியபடி தமிழ்மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உலகிலுள்ள அனைத்து மக்களும் தங்கள் தாய்மொழியின் சிறப்புகளைக் கொண்டாடி வருகின்றனர்.