ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது யாரடி நீ மோகினி. 2017ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவுபெற்றது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதாவும் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவும் அந்தரத்தில் பறந்து சண்டை போடும் விதமாக காட்சிகள் இருந்தது. சிலர் அந்த காட்சிகளில் டூப் போட்டு நடித்திருப்பார்கள் என்று நினைக்கலாம் ஆனால் இருவரும் டூப் இல்லாமல் நடித்த காட்சி தற்போது தெரியவந்துள்ளது.
அதற்கு சான்றாக பேய் கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் திரைப்படங்களில் உபயோகிக்கப்படும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி ரோபின் உதவியுடன் இருவரும் வானத்தில் பறந்து சண்டையிடும் காட்சிகள் பதிவாகியிருந்தது இதனைப் பார்த்த பலரும் அந்தரத்தில் ரிஸ்க் எடுத்த இருவரையும் பாராட்டி வருகின்றனர்.