நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தாலும் அதிமுக சார்பில் மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 94-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணன் செவாலியர் சிவாஜி சார் அவர்களைப்பற்றி நாம் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவருடைய நடிப்பு, அவருடைய முகபாவங்கள், அதுமட்டுமல்லாமல் கதாபாத்திரங்களோடு அவர் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு மிக சிறப்பு வாய்ந்த ஒரு நடிகர் என்று சொன்னால் அண்ணன் செவாலியர் அவர்களை சொல்ல வேண்டும்.
கப்பலோட்டிய தமிழன், அதுபோல் வீரபாண்டிய கட்டபொம்மன், அதேபோன்று உத்தமபுத்திரன் படம் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் ராஜ உடை போட்டு நடனம் ஆடுவது அவ்வளவு பிரமாதமாக இருக்கும். யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அது. அந்த பாட்டு அவ்வளவு ஒரு பிரமாதமாக இருக்கும். அதே மாதிரி ஒரு திரைப்படத்தில் அந்த அளவிற்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நம் கண்முன் நிற்கின்றவர் என கூறினார்.