செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் நடந்த கொடநாடு கொலையை பார்த்தால் தெரியும். இதை தான் நான் ஏற்கனவே சொன்னேனே. சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது, போலீஸ் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற டிஜிபியை பற்றி குறை சொல்லக்கூடியவர்கள், தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடியவர்கள்,
குற்ற புலனாய்வு குறித்து எல்லாம் அக்கறையோடு பேசக்கூடியவர்கள், இந்த ஆட்சி மீது குற்றம் சொல்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் யார் தவறு செய்தாலும் அவர்கள் சட்டரீதியாக சட்டத்திற்கு முன் நிலை நிறுத்தப்பட்டுவார்கள். நீதியை நிலை நிறுத்துவோம், அது யாராக இருந்தாலும் சரி. நீங்களே சொல்லியிருப்பது போல கொடநாடு விவகாரம் .. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
எனவே கொடநாடு விவகாரத்தில் எப்படி இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, அதே நடவடிக்கைகளை சட்டத்திற்கு முன் நிறுத்தக்கூடிய வகையிலே சட்டத்தின் வழிவகை கொண்டு இவற்றுக்கான ஒரு முடிவு கொண்டு வருவதற்கு நாங்கள் நிச்சயமாக செயல்படுவோம். இது எதை காட்டுகிறது என்று சொன்னால், இவர்கள் தங்கள் ஆட்சியிலே அதிகாரத்தை பயன்படுத்தி, காவல்துறை துஷ்ப்ரயோகங்களை உருவாக்கி, எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.