கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காட்டுயானைகளின் நடுவில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுலாத் தலமான மூணாறு அருகில் தன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஜி என்ற இளைஞர் திடீரென்று காட்டு யானைகளின் கூட்டம் நடுவில் சிக்கிக் கொண்டார். யானைகள் கூட்டம் தன்னை நோக்கி வருவதை பார்த்த சஜி, அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் அவரால் ஓட முடியவில்லை. இதனால் அங்கு இருந்த உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஏற முயற்சித்தான். இதையடுத்து சஜி சில நிமிடங்களில் மேலேஏறி உச்சியை அடைந்தார். இருப்பினும் யானைகள் அவரை விடாமல் மரத்தைச் சுற்றி வளைத்தது.
நேரம் கடந்து விட்டதை உணர்ந்த சஜி, தன்னை காப்பாற்றும்படி கதற ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். சுமார் 90 நிமிடங்களுக்குப் பின் அந்த காட்டுயானைகளை ஊர் மக்கள் விரட்டியடித்தனர். யானைகள் கூட்டம் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே சஜி, உள்ளூர் மக்களுக்கு நன்றி கூறி கீழே இறங்கினார். இதற்கிடையில் சின்னக்கானல் பகுதியிலுள்ள அப்பகுதி மக்கள், காட்டுயானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.