Categories
சினிமா தமிழ் சினிமா

“யாராலும் இனி கமலை காப்பாற்ற முடியாது”… விக்ரம் படத்திற்கு வந்த சோதனை… கமெண்ட் அடித்து வரும் நெட்டிசன்கள்…!!!!!

விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாடிலைட் உரிமம் குறித்த செம்ம மாஸ் அப்டேட்  ஒன்று வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதல் படத்திலேயே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றார்.

தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மேலும் கமல் படத்தை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய லோக்கேஷின்  இயக்கத்தில் கமல் நடித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்திய  படமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மே 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் படம் குறித்த வெளியாகும் அப்டேட்கள் அனைத்தையும் ட்ரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின்சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் டிவி வாங்கி இருக்கிறது. அதே போல் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. மேலும் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் இரண்டும் சேர்த்து 150 கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து ‘விக்ரம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதால் இனி அடிக்கடி படத்தை பார்க்கலாம் என்றும் யாராலும் இனி கமலை காப்பாற்ற முடியாது என கிண்டலாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனாலும் எத்தனை தடவை ஆண்டவர் படம் டிவியில் போட்டாலும் பார்க்க நாங்க ரெடி எனவும் ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். ‘விக்ரம்’ படம் ஜுன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |