Categories
மாநில செய்திகள்

“யாராலும் தனித்தனியாக செயல்பட முடியாது” தேவையற்ற காலதாமதம் எதற்காக….? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4-வது முறையாக துறைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்தாலும் மொத்தமாக அனைவரையும் சந்திப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் தனித்து செயல்பட முடியாது. ஏனெனில் எல்லா துறைகளும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணந்தவை தான். எனவே எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு சேர செயல்பட வேண்டும்.

மற்ற துறைகளின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த கூட்டங்கள் இருக்கிறது. அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாம் செயல்பட்டு வருகிறோம். அந்த சிந்தனையில் தான் திட்டங்களையும் தீட்டி வருகிறோம். 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிறப்பிக்கப்பட்ட 1680 அறிவிப்புகளில் 1580 அறிவுக்களுக்கு அரசாணைகள் வழங்கப்பட்டு 94 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2022-23-ம்‌ ஆண்டு 1634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் கடந்த ஜூன் மாதம் 23 விழுக்காடு அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் 57 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள அறிவிப்புகளுக்கான அரசாணைகளையும் வருகிறது அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இந்த அரசாணைகளை செயல்படுத்துவதற்கான உற்சாகமும், செயல் திறனும் துறைச் செயலாளர்களிடம் இருக்க வேண்டும். சில திட்டங்களை நிறைவேற்றும் போது அதை நிறைவேற்றுவதற்கு தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு திட்டத்தை நிறை வேற்றுவதற்கு முன்பாக சிந்திக்கலாம். ஆனால் சிந்தித்துக்கொண்டே இருக்கக் கூடாது. நாம் நிதி  நெருக்கடியில் இருக்கிறோம். எனவே எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொடுக்க வேண்டுமா அதை முதலில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுவதால், அந்த திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட சில துறைகளின் செயல்பாடுகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதால், துறை செயலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நான் எப்போதும் துறை ரீதியாக உங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறேன். அதேபோன்று அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது. இதே போன்ற ஒருங்கிணைப்பு உங்களுக்கும் உங்கள் கீழ் உள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா என்று கேட்டால் ஒரு சில துறைகளில் அது இல்லை என்பதே உண்மை. இதனால் தான் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்துதல், கலந்துரையாடுதல் மற்றும் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கும் ஆட்சி நிர்வாகத்துக்கும்மான தொடர்பும், அவர்களுடைய அனுபவமும் அனைவராலும்  மதிக்கப்பட வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்க கூடாது. ஆட்சி செய்பவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டும் நிறைவேற்றுபவர்களாக இருக்காமல், மக்களுக்காக நீங்கள் நிறைவேற்ற நினைக்கும் உங்கள் கனவு திட்டங்களையும் எடுத்துக் கூறி அதை செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகளையும் = மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம், துறை தலைவர்கள், துறைச்செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகிய 4-ம் ஒரே நேர்கோட்டில் செயல்பட வேண்டும். ஒரே மாதிரியான நேர்கோட்டில் சென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விடும் என்பதில் ஐயமில்லை. இதற்கான உங்கள் பணியை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Categories

Tech |