Categories
தேசிய செய்திகள்

யாரால நா கர்ப்பமானேன்…? கை விரித்த 2 காதலர்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் 2 பேரை காதலித்து கர்ப்பமான பெண்ணுக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் கும்சி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் சம்பங்கி என்ற தம்பதியின் மகள் அஸ்வினி. இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும், தந்தை கூலி வேலை செய்து வருகிறார் என்பதாலும் இவர் அனுப்பும் பணத்தின் மூலம் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் அஸ்வினி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பசவராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதேநேரம் கும்சி கிராமத்தில் மதுசூதனன் என்று இளைஞரையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இரண்டு இளைஞர்களுக்கும் தெரியாது.

இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் அஸ்வின் வீட்டிற்கு வெவ்வேறு நேரங்களில் வரும் வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அஸ்வினி கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து இளைஞர்களிடம் தெரிவித்த போது நாங்கள் காரணமில்லை என்று இருவரும் கையை விரித்து விட்டனர். யாரால் நான் கர்ப்பம் ஆனேன் என்று குழப்பம் அடைந்த சூழலில் அவரின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. இதுகுறித்து அஸ்வினியின் தாயார் கேட்டபோது அதிகமாக சாப்பிடுவதால் தொப்பை வந்து விட்டதாக கூறினார். வெளியில் கூறினால் மானம் போய் விடும் என்ற பயத்தில் மறைத்து வாழ்ந்து வந்த அஸ்வினுக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அவரை பரிசோதித்ததில் அவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சம்பங்கி நடந்தது பற்றி மகளிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த இரட்டை காதல் விவகாரத்தை அஸ்வினி கூறியுள்ளார். இதற்கிடையில் மருத்துவமனையில் அஸ்வினிக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அஸ்வினியும் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லை மீறிய மகளின் வாழ்க்கை மரணத்தில் முடிந்ததால், இழப்பை தாங்கமுடியாத பெற்றோர்கள் பரிதவிக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |