உக்ரைனை ஆக்கிரமிப்பதை தடுக்கும் விதத்தில் எந்த ஒரு நாடும் நேரடியாக ரஷ்யாவை தாக்கினால் அது பயங்கரமான அணு ஆயுதத் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மறைமுகமாக அதிபர் புடின் மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போருக்கு முன்பாகவே அதிபர் புதின் உக்ரேன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்யா மிகவும் பலம் வாய்ந்த அணு சக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி உக்ரேனை ஆக்கிரமிப்பைத் தடுக்கும் விதத்தில் எந்த ஒரு நாடும் ரஷ்யாவை நெருங்கினால் மிகவும் பயங்கரமான அணு ஆயுதத் தாக்குதலை அது சந்திக்க நேரிடும் என்றும் அவர் உலக நாடுகளை எச்சரித்துள்ளார். இவ்வாறு இருக்க போர் நிபுணர்கள் அதிபர் புதின் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே அணு ஆயுதப் போர் மீளுவதற்கு வாய்ப்புள்ளதாலயே அவர் ஏற்கனவே இப்படி கூறியுள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.