Categories
உலக செய்திகள்

“யாரா இருந்தா என்ன” பிரதமருக்கே ரூ.176060 அபராதம் விதித்த போலீசார்…. காரணம் என்ன தெரியுமா…??

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நார்வேயில் கொரோனா விதிகளை மீறி 13க்கு மேற்பட்டவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நார்வே பிரதமருக்கு காவல்துறையினர் ரூ.176060 அபராதம் விதித்துள்ளனர். மேலும் பிரதமரை எச்சரித்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |