Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்ல கூடாது…. மாணவிக்கு கொலை மிரட்டல்…. போக்சோ சட்டத்தில் ரேஷன் ஊழியர் கைது….!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு காவல் எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேதாரண்யத்தில் படித்துக்கொண்டு தலைஞாயிறு பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மாணவியை செந்தில்குமார் மிரட்டியுள்ளார். இதனையடுத்து புகாரின் பெயரில் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி, மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரியா வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Categories

Tech |