Categories
உலக செய்திகள்

யாருகிட்ட மோதுறீங்க ? அமெரிக்காவுக்கு பதிலடி – சீனா அதிரடி நடவடிக்கை …!!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்காவின் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது

சீனா – அமெரிக்கா என்ற இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நடந்துவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு பிறகு  இந்த மோதல் மேலும் வலுப்பெற்று இருக்கிறது. இதன் முக்கிய நகர்வாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சீன தூதரகத்தை மூட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை திரும்ப பெற சீனா வலியுறுத்திய பின்பும், அமெரிக்க அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி தரும் விதமாக சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள செங்கடுவில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்தை உடனே மூட சீனா உத்தரவிட்டுள்ளது.இந்த பதிலடி  மூலம் அமெரிக்காவை சீனா சீண்டியுள்ளது. ஹாங்காங், உய்கர் இஸ்லாமியர்கள், இணைய தாக்குதல், உளவு வேலை, கொரோனா என பல வழிகளில் அமெரிக்கா சீனாவை தாக்கிவருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா முக்கியப்புள்ளியாக இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |