தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை மீனா. கடந்த 2009-ம் ஆண்டு நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் மாற்று உறுப்புகள் கிடைக்காத காரணத்தினால் வித்தியாசாகரின் உடலில் உள்ள உறுப்புகள் படிப்படியாக செயல் இழந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே சுயநினைவை இழந்து விட்டார். இவர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது உடல் கடந்த புதன்கிழமை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வித்தியாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நைனிகா குறித்த ஒரு சோகமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நைனிகா தனது தந்தையுடன் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.
ஏனெனில் வித்யாசாகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே சுயநினைவை இழந்துவிட்டார். இதன் காரணமாகத்தான் தந்தையுடன் நைனிகாவால் பேச முடியாமல் போய்விட்டது. மேலும் வித்யாசாகர் மகள் நைனிகா மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் நைனிகா மற்றும் மீனாவிற்கு வந்த நிலைமை வேறு யாருக்குமே வரக்கூடாது என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.